Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, March 26, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
[26 - March - 2008] [Font Size - A - A - A]
* இஸ்ரேலில் பிரதமர் விக்கிரமநாயக்கா

ஜெருசலேம்:அல்ஹைதா , பி.கே.கே போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழ் இராச்சியத்தை உருவாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு நான்குநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஜெருசலேமில் இலங்கை நிலைவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் பி.கே.கே, தலிபான், பிலிப்பைன்ஸிலுள்ள இஸ்லாமியக் குழுக்கள் மற்றும் அல்ஹைதாவுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைப் பேணி வருவதாக பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சிரியா மற்றும் லெபனானிலுள்ள பலஸ்தீன முகாம்களிலும் பலஸ்தீன இளைஞர்கள் பயிற்சி பெறுவதாக சில அறிக்கைகள் கிடைத்துள்ளன. தற்கொலைத் தாக்குதல்களுக்கு கரும்புலிகள் பொறுப்பாக இருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் செய்கின்றனர்.

சில பலஸ்தீனியக் குழுக்களிடமிருந்தே அவர்கள் இதனைக் கற்றுக் கொண்டதாக பொதுவாக நம்பப்படுகிறது என்றும் விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ஜனாதிபதி சிமொன் பெரஸ், பிரதமர் ஈகுட் ஒல்மேர்ட், பாதுகாப்பு அமைச்சர் ஈகுட் பராக், வெளிவிவகார அமைச்சர் ரிசிப்பிலிவினி ஆகியோருடன் பிரதமர் விக்கிரமநாயக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

ஒல்மேர்ட்டுடனான சந்திப்பின் போது இலங்கை பயங்கரவாதத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்றாட வாழ்வையும் தேசிய பொருளாதாரத்தையும், பயங்கரவாதம் மோசமாக பாதித்துள்ளதாகவும் கூறியதாக இஸ்ரேலில் பிரதமர் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலும் இலங்கையும் பொதுவான தன்மையை அதிகளவுக்கு கொண்டிருப்பதாகவும் பயங்கரவாத தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நிலையில் இருநாடுகளும் இருப்பதாகவும் பிரதமர் விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.

"தமிழ் இராச்சியத்தை இந்தியா அனுமதியாது"

இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு தனியான சுதந்திர நாடொன்று உருவாக்கப்படுவதை இந்தியா ஒரு போதும் அனுமதியாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு தனியான நாடொன்று உருவாக்கப்படுவதற்கு இந்தியா ஒரு போதும் இடமளிக்காது என்பது மனதில் கொள்ள வேண்டிய விடயமாகும். ஏனெனில், அத்தகையதொரு நடவடிக்கையானது இந்தியாவிற்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியா எப்போதுமே இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பாக தீவிரமான ஈடுபாட்டுடன் உள்ளது. இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளையும் உள்ளடக்கி தனியான தமிழ் இராச்சியத்தை உருவாக்க பிரபாகரன் விரும்பியிருந்தார். இலங்கையில் மூன்று தசாப்தகால மோதலுக்கு அரசியல் தீர்வு காண்பதில் இலங்கை ஈடுபாட்டுடன் உள்ளது . அது இராணுவத்தீர்வை நாடவில்லை.

வரலாற்று பூர்வமாகவே இலங்கை ஒரே நாடாக இருந்து வருகிறது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ பிரிவினை என்பது சாத்தியமற்றதாகும் என்று விக்கிரமநாயக்கா கூறியுள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் கதவுகள் எப்போதுமே திறந்திருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் அதேசமயம், தற்போதைய தலைவரின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
உடையார் கட்டுக்குளத்தில் விமானத் தாக்குதல்
புல்மோட்டை கடலில் மோதல்
முகத்துவாரம் வீடொன்றிலிருந்து வெடிபொருள், கருவிகள் மீட்பு
அல்ஹைதா , தலிபான்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு தமிழர்களுக்கு தனிநாட்டை இந்தியா ஒருபோதும் அனுமதியாது
காச நோயால் தினமும் 4 ஆயிரம் பேர் மரணம்
இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் நாடு
மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துக்களை பயன்படுத்த தடை
கிழக்கு மாகாண தேர்தல் களத்தில் குதிக்க ஐ.தே.க. தீர்மானம்
கிழக்கில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதென்ற நம்பிக்கையே அதிரடிப்படை அகற்றப்பட்டதற்குக் காரணம்
கப்பப் பணத்தை பெற வந்தபோது மடக்கிப் பிடித்த பொலிஸார்
10 புலி உறுப்பினர்களின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி. யூடாக வன்னிக்கு
ஐ.சி.ஆர்.சி.யின் வதிவிடப் பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
அநுராதபுரம் முகாம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் சிப்பாய் உயிரிழப்பு
`அக்‌ஷன் பாம்' அலுவலக நுழைவாயில் அருகே சென்று உள்ளே பார்த்தபோது சடலங்கள் கிடப்பதைக் கண்டேன்
"மா விலை அதிகரிக்க பிறிமா அனுமதி கோரவில்லை"
20 நாட்களில் 501 புலிகள் பலி
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
போரினால் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கலாமென்கிறது ஐ.நா.
இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்
பூசா முகாமிலிருந்து நால்வர் விடுதலை வெலிக்கடை சிறைக்கு மேலும் 10 பேர்
யாழ். நுண்கலைப் பீட மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் சரண்
திடீரென ஏற்பட்ட வயிற்றுளைவால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பலத்த மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கக்கோரிக்கை
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு ஏப்ரல் 9 வரை விண்ணப்பிக்கலாம்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட 94,194 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை
கண்டி நகர வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பயண அனுமதி வழங்க புதிய நடைமுறை அமுல்
பொலிஸ் பிரிவுகளை மக்கள் இனங்காணும் வகையில் விபரங்களடங்கிய பெயர்ப் பலகைகள்
பொதுமகனை மோதிக்கொன்ற இராணுவ கவச வாகனம்; ரூபா 5 இலட்சம் பிணையில் விடுவிப்பு
மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிட கருத்தரங்கு
வவுணதீவு, காரைதீவு பிரதேசங்களில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகும் மக்கள்
மலேசியாவில் இறந்த தமிழ் இளைஞனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
வட - கிழக்கு பாதுகாப்பு பிரிவினருக்கு தமிழ்மொழி பயிற்சி வழங்க நடவடிக்கை
மல்வத்து ஓயா பெருக்கெடுப்பு; வான்பாயும் குளங்கள் அநுராதபுரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com