* 5 பேர் சந்தேகத்தில் கைது
டிட்டோ குகன்
கொழும்பு, முகத்துவாரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடி பொருட்களும் வெடிக்க வைக்கும் கருவிகள் சிலதும் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்தப் பொருட்கள் அனைத்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் படையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த வெடி பொருட்களும் வெடிக்க வைக்கும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.
4 கிலோ எடையுடைய "சீ-4" ரக வெடி பொருட்களும் 10 மின்சார டெட்டனேட்டர்களும் 4 நேர கணிப்பு கருவிகளுமே வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
இது தொடர்பாக 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.