முல்லைத்தீவு உடையார் கட்டுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆயுதக் களஞ்சியத்தில் ஆயுதங்கள் , வெடிபொருட்கள் மற்றும் யுத்த உபகரணங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கடும் விமானத் தாக்குதலையடுத்து தொடர்ச்சியாக பலத்த குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியில் பெரும் தீச்சுவாலைகளும் புகை மண்டலமும் எழுந்ததை விமானிகள் கண்டதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலானது புலிகளின் ஆயுத விநியோகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.