புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி கடந்த காலங்களில் தெற்கில் பரவிய வதந்தித் தகவல்களுக்கு புலிகள் இயக்கம் கடந்த 12 ஆம் திகதி ஞாயிறு பிற்பகல் 12.30 மணிக்கு பதில் அளித்தது. கிளிநொச்சியிலுள்ள அந்தரங்கமான நிலையம் ஒன்றில் புலிகள் தலைவர் பிரபாகரன் தோன்றி கொல்லப்பட்ட தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்றப் பிரதிநிதி கே.சிவநேசனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார். அந்தப் புகைப்படங்களை புலிகள் இயக்கம் வெளியிட்டது.
அந்த நிலையத்தில் பிரபாகரன் 15 நிமிடங்கள் தோன்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். அதற்குக் காரணம் அவர் இறந்துவிட்டார் என்றும், காயப்பட்டுவிட்டார் என்றும், அவருடைய கால் வெட்டி அகற்றப்பட்டுவிட்டது என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களே ஆகும். அவர் நேரில் பார்த்த நபர்கள் குறைவான எண்ணிக்கையானோரே. அவர்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் 13 பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அடங்குவர். ஆனால் பிரபாகரன் தோன்றிய அந்த நிகழ்ச்சி பற்றி விபரிக்க அவர்கள் விரும்பவில்லை. எவ்வறாயினும் அந்த முக்கிய நிகழ்ச்சி பற்றி இங்கே தகவல்கள் தரப்படுகின்றன.
காலம்சென்ற சிவனேசனின் இறுதிக் கிரியைகளுக்காகச் சென்று ஓமந்தை இராணுவக் காவலரண் வரை பயணம் செய்த மேற்படி 13 தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அந்த இராணுவக் காவலரணுக்கு சிறிது தூரத்திலுள்ள புலிகள் இயக்கக் காவலரணில் இருந்து புலிகள் இயக்கத்தினர் கிளிநொச்சிக்கு கூட்டிச்சென்றனர். பின்னர் அவர்களையும் சிவனேசனின் மனைவியையும் 4 பிள்ளைகளையும் அன்று (12.03.2008) பிற்பகல் 8.30 மணியளவில் கிளிநொச்சி கலாசார மண்டபம் நிலையத்திலிருந்த வாகனம் ஒன்றில் குறித்த அந்தரங்க நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர். அந்தப் பயணம் சுமார் ஒரு மணிநேரம் எடுத்தது. பின்னர் பயணத்தின் முடிவில் அங்குள்ள கட்டடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிவனேசனின் பூதவுடல் இறுதி மரியாதைகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. இரவு சுமார் 10.30 மணியளவில் வாகன என்ஜின் ஒன்றில் பெரிய இரைச்சல் சத்தம் வெளியே கேட்டது. அது ஜீப்பின் சத்தமா அல்லது வான் போன்ற வேறு வாகனங்களின் சத்தமா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் ஆயுதம் தரித்த புலிகள் அணியினர் முன்வர இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அங்கு பிரவேசித்தார். தொடர்ந்து அவருக்குப் பின் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் அல்லது பாலசிங்கம் மகேந்திரன் வந்தார். அடுத்து புலிகள் இயக்க நிதிப் பிரிவுத் தலைவர் தமிழேந்தி பிரவேசித்தார். அடுத்து புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிரசன்னமானார்.
இந்த நிகழ்ச்சி பற்றி தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்ததற்கேற்ப பிரபாகரன் பிரவேசித்ததும் உடனடியாக முதலில் அவர்களுடைய கவனம் பிரபாகரனின் கால்களை நோக்கியே சென்றதாகவும், அவருடைய கால்கள் காயப்பட்டுள்ளதா அல்லது பொய்க்கால் பொருத்தப்பட்டுள்ளதா என்று தேடிப்பார்த்ததாகவும், ஆயினும் அவ்வாறு இல்லாத அவர் வழமைபோலவே நடந்துவந்ததைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ளே நுழைந்த பிரபாகரன் சம்பிரதாயப்படி தேங்காய் எண்ணெய் விளக்கைப் பற்றவைத்தார். சிவனேசனின் பூதவுடலுக்கு மாலை அணிவித்தார். கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டிருந்த சிவனேசனின் பூதவுடலுக்கு தலைவணங்கி சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிவனேசனின் மனைவியுடன் ஆறுதல் கூறிப்பேசினார். தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேசினார். அவர்களை மறுநாள் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனைச் சந்திக்கும்படியும் பிரச்சினைகள் பற்றிப் பேசும்படியும் வேண்டிக் கொண்டார். அப்பொழுது தமிழ்க் கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற பிரதிநிதி மொஹொமட் இமாமின் பக்கம் பிரபாகரனின் கவனம் திரும்பியது. அவர் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்திருப்பது தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பலப்படுத்தும் என்று அவரிடம் பிரபாகரன் கூறினார். பின்னர் சிவனேசனுக்காக நியமிக்கப்பட்ட புதிய தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதி சொலமன் எஸ். சிறிலுடனும் பின்னர் ஏனைய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனும் போராட்டம் பற்றிய முக்கிய கருத்துகளை வெளியிட்டார். அத்துடன் தற்போது அரச படையினர் மேற்கொண்டு வரும் புதிய படைநடவடிக்கைகளுக்கு எதிராக சிறந்த முறையில் முகம் கொடுத்துவருவதாகவும் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம் எனவும் வன்னி மக்கள் படும் வதைகள், வேதனைகள், மனித உரிமை மீறல்கள் வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டும்படியும் பிரபாகரன் தமிழ்க் கூட்டமைப்பினரிடம் கேட்டுக் கொண்டார்.
அங்கு பிரபாகரன் 15 நிமிடங்களுக்கு மேல் தங்கியிருக்கவில்லை. பிரபாகரன் அங்கிருந்து வெளியேறும் வரையில் ஏனைய அனைவரும் அந்த மண்டபத்துக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
பிரபாகரன் இவ்வாறு தோன்றியது பற்றி கொழும்பில் சில தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவர்களுள் பாதுகாப்புப் பிரிவினரும் அடங்குவர். வெளியினரும் அடங்குவர். இவர்கள் கூறுவது யாதெனில் பிரபாகரன் போல் வேறு யாரோ ஒரு நபர் வேடம் போட்டுக் கொண்டு அந்த நிலையத்திற்கு வந்து சிவனேசனின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் என்பதையே அரசதரப்பில் பாதுகாப்புப் புலனாய்வு பிரிவு தரப்பில் இவ்வாறு அதிஅந்தரங்கமான பதுங்குகுழி நிலையத்தில் வைத்தே பிரபாகரன் சிவநேசனின் பூதவுடலுக்கு வணக்கம் செலுத்தினார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் பிரபாகரனைச் சந்தித்தது பற்றிக் கூறும் தகவல்கள் பொய்யானவை என்றும் பிரபாகரன் இவ்வாறு மீண்டும் தோன்றியதாகக் கூறப்படுவது முக்கிய நிகழ்வு அல்ல எனவும் மேலும் பிரபாகரன் கடும்காயங்களுக்குள்ளானதாகத் தகவல் முன்னரே வெளியாகியிருப்பதால் அவர் இன்னும் ஆரோக்கியமாகவும் புலிகள் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று வெளியுலகத்துக்குக் காட்டவே இவ்வாறு அவர் செய்தியிருக்கிறார் எனவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
லங்காதீப விமர்சனப்பகுதி 18.03.2008