காபூல்: ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலிபான் போராளிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இவற்றை அகற்றும் பணியில் ஐ.நா.தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஜாஸ்ஜன் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தவேளை, அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 5 பேர் பலியானதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.