Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
அந்தாட்டிக்காவில் பாரிய பனிமலை உடைய ஆரம்பம்
[27 - March - 2008] [Font Size - A - A - A]
நியூயோர்க்: அந்தாட்டிக்காவின் கரைப்பகுதியில் 13,680 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிமலையொன்று உடைய ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பகுதி துரிதமாக வெப்பமடைந்து வரும் காலநிலை மாற்றத்தாலேயே மான்ஹாட்டன் தீவிலும் பார்க்க 7 மடங்கு அதிகமான பரப்பளவுடைய இந்தப் பனிமலை உடைய ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவின் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி விபரங்கள் தொடர்பான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்மதி பிரதிமைகள் மூலம் தாம் பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் தெற்குப் புறத்தில் 1600 கிலோ மீற்றர் தூரத்தில் அந்தாட்டிக்கா குடாவின் தென்மேற்கில் வில்கின்ஸ் பனிப்பாறை உள்ளது. இது நிரந்தரமாக மிதந்துகொண்டிருக்கும் பனிப்பாறையாகும்.

அந்தாட்டிக்கா வளைகுடா கடந்த 50 வருடங்களாக வெப்பநிலை அதிகரிப்பு அனுபவத்தைப் பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு 0.5 சதம் பாகை வெப்பநிலை அதிகரிப்பு பூமியில் ஏற்பட்டிருப்பதை அந்தாட்டிக்காவில் உணர முடிந்திருக்கிறது.

வில்கின்ஸ் பனிப்பாறையானது சில நூற்றாண்டுகளுக்கு அதே இடத்திலிருக்குமென நம்பினோம். ஆனால், அனல்காற்றும் சமுத்திர அலைகளும் அதனை உடைப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்று அமெரிக்க விஞ்ஞானியான ரெட் ஸ்காம் பொஸ் என்பவர் கூறியுள்ளார்.

இவரே பனிப்பாறை உடைய ஆரம்பித்ததை மார்ச்சில் அடையாளம் கண்டவராகும்.

வில்கின்ஸ் பனிப்பாறையானது பெப்ரவரி 28 இல் உடைய ஆரம்பித்ததாக செய்மதி பிரதிமைகளை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 41ஙீ 2.5 கிலோ மீற்றர் பரப்பளவுடைய பாரிய பனிப்பாறையொன்று வில்கின்ஸின் தென்மேற்கு முனையிலிருந்து உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் 405 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய இடைவெளி வில்கின்ஸில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
வெப்பநிலை அதிகரிப்பால் தெற்காசியாவில் கோடிக்கணக்கானோர் இடம்பெயரும் நிலை
அந்தாட்டிக்காவில் பாரிய பனிமலை உடைய ஆரம்பம்
`நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க இணைந்து செயற்படுவோம்
பிரதமர் பதவியில் கிலானி 5 ஆண்டுகளுக்கும் நீடிப்பார்
நேபாள இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு? மாவோயிஸ்ட்டுகள் வீதிமறியல் போராட்டம்
ஆப்கானில் ஐவர் சுட்டுக்கொலை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com