கம்பளையில் விடுதியொன்றில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மூன்று இளம் யுவதிகளையும் விடுதியை நடாத்தி வந்த இருவரையும் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.
இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து கண்டி பொலிஸாருடன் இணைந்து கம்பளை பொலிஸார் இவ்விடுதியை முற்றுகையிட்டு ஐந்து பேரையும் கைதுசெய்தனர்.
இந்த யுவதிகள் மூவரும் அநுராதபுரம், கந்தளாய் மற்றும் சீதுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுள் இருவர் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் மற்றயவர் முஸ்லிம் எனவும் கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜாலிய ஹீன்கந்த தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்கள் ஐவரும் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்யப்பட்ட போது விடுதியை நடாத்தி வந்த இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுவதிகள் மூவரும் சமூகநோய்கள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பளை பொலிஸ் நிலைய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரட்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.