|
2007 ஆம் ஆண்டு குருநாகல், அநுராதபுரம், வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 73 யானைகளும், 33 பேர் யானை தாக்கியும் மரணமானதாக வனவள திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் 7 யானைகளும் 14 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 52 யானைகளும், 13 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 யானைகளும், 03 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 12 யானைகளும் 13 பேரும் மரணமானதாக வனவள திணைக்களம் அறிவித்துள்ளது. |