கொழும்பு கோட்டைக்கும் - வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பித்து வவுனியா , மன்னார் மாவட்ட மக்களின் தூர இடங்களுக்கான போக்குவரத்து கஷ்டப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் சிவன் சிவகுமார் (ரகு) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடிதமூலம் கேட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கான ரயில் சேவைகளும் , தரைவழிப் போக்குவரத்து சேவைகளும் , மதவாச்சி வரையுமே நடத்தப்படுகின்றன.
இதனால், நோயாளர்கள் , முதியவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சிரமங்கள் மத்தியில் தமது பயணத்தை தொடர வேண்டியுள்ளது.
எனவே, போக்குவரத்து துறையில் ரயில் சேவையை மாத்திரமாவது வவுனியா வரையும் நடத்த ஆவன செய்யவும் எனவும் அமைப்பாளர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதவாச்சியில் பயணிகள் இறங்கி வேறு பஸ்களில் அல்லது வாகனங்கள் மூலம் பயணம் செய்யும் கஷ்ட நிலைமை மதவாச்சி ரயில் நிலையத்தில் இருந்து மதவாச்சி பஸ் நிலையம் வரையும் செல்வது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.