*மனைவி மனித உரிமைகள் இல்லத்தில் முறையீடு
கந்தப்பளை, நோனாத் தோட்டத்தைச் சேர்ந்த பத்மராஜ் என்ற 30 வயதுடைய நபர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த சமயம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால், இதுவரை அவர் குறித்த தகவலெதுவும் வெளியாகவில்லையென முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மனைவி சரோஜினி இது குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கொழும்பு மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கடந்த 21 ஆம் திகதி அதிகாலை எமது வீட்டிற்குள் அத்துமீறி உட்புகுந்த 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டை சோதனையிட்ட பின்னர் எனது கணவரை விசாரணையின் பின்னர் திருப்பி அனுப்புகிறோமென கூறி அழைத்துச்சென்றனர்.
எனினும், இதுவரை எனது கணவர் குறித்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. 4 வயது பிள்ளையின் தந்தையான அவரை மீட்டுத்தருமாறு கோருகிறேன்.இவ்வாறு அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.