வாழைத்தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞரொருவர் மின்னல்தாக்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிங்கம பகுதியைச் சேர்ந்த விதாரண கமகே சமன் (வயது - 19) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இச்சம்பவத்தின் போது அருகிலிருந்த நபர் பலத்த எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.