துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை மாலை படையினரால் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று யுவதியினுடையது எனவும் இவை விடுதலைப்புலி உறுப்பினர்களுடையவை எனவும் வவுனியா ஆஸ்பத்திரி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்மடு முன்னரங்க காவல் அரண் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்களே எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலங்களில் விடுதலைப்புலிகளின் அடையாள தகடுகளும், சயனைட் குப்பிகளும் காணப்பட்டன. நீதிபதியின் மரண விசாரணையின் பின்னர் இச்சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே வெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இரு விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்களும் தம்மால் மீட்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
இவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விடுதலைப்புலிகளுக்கு அனுப்பப்படும் எனவும் படையினர் தெரிவித்தனர்.