மலேசியாவில் மரணமான வவுனியாவைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரேம்குமாரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உறவினர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரிடம் முறையிட்டதையடுத்து, அவர் மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்பு கொண்டு சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த இளைஞனின் மரண விசாரணையை துரிதப்படுத்தி சடலத்தை விரைவாக அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இந்த இளைஞன் கொல்லப்பட்டார்.
இவர் மலேசியாவில் மாடிக் கட்டிடம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிய சென்றிருந்தார்.