Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முல்லைத்தீவிலிருந்து தமிழகம் சென்ற போது கச்சதீவுக் கடலில் 11 பேர் கடற்படையால் கைது
[27 - March - 2008] [Font Size - A - A - A]
முல்லைத்தீவு பகுதியிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற 11 பேர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கச்சதீவு கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், படகொன்றில் காரைநகர் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தவர்களையே செவ்வாய்க்கிழமை அதிகாலை தாங்கள் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் 11 பேரையும் கடற்படையினர் நேற்று புதன்கிழமை காலை ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி ஜோய் மகாதேவா முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து படகொன்றில் வந்த இவர்களைத் தாங்கள் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்ததாக கடற்படையினர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

எனினும், முல்லைத்தீவிலிருந்து படகொன்றில் இந்தியா சென்ற தங்களை கச்சதீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினர் கைது செய்து இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், தங்களை விடுதலை செய்யுமாறும் நாட்டை விட்டு வெளியேறி இந்தியா செல்ல அனுமதிக்குமாறும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி அனைவரையும் எதிர் வரும் 9 ஆம் திகதி (ஏப்ரல்) வரை யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஐந்து மாதக் குழந்தை, இளம் தாய், பெண்ணொருவர் உட்பட இந்தப் 11 பேரும் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.

Email this page Your Opinion Print this page
கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றலாமென்ற சிந்தனையால் பாரிய அழுத்தங்களில் சிக்கியிருக்கும் அரசு
முல்லைத்தீவில் விமானங்கள், மன்னாரில் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதல்
ஓமந்தை அருகே மூவர் சுட்டுக் கொலை மூவர் படுகாயம்; ஐவர் படையினரால் கைது
பிரபாகரன் திரைப்பட இயக்குநர் பீரிஸ் மீது சென்னையில் தாக்குதல்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்
கூட்டணி சேராமல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் களமிறங்க ஐ.தே.க., மு.கா. கலந்தாலோசனை
மட்டக்களப்பு படுவான்கரையில் கிளைமோர் தாக்குதல்; 2 பொலிஸார் பலி
பிரிவினை பிரகடனத்துக்கு அண்மித்த காலப்பகுதியில் கொசோவோவிருந்த நிலைமையில் தற்போது இலங்கை
கஞ்சிகுடிச்சாறு காட்டில் கண்ணிவெடி தாக்குதல்; அதிரடிப்படைவீரர் பலி
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்புரிமையை தக்கவைக்க தீவிர முயற்சி
யாழ். குடாநாட்டுக்கான பாடநூல்கள் யால கப்பல் மூலம் அனுப்பப்படும்
முல்லைத்தீவிலிருந்து தமிழகம் சென்ற போது கச்சதீவுக் கடலில் 11 பேர் கடற்படையால் கைது
கிழக்கு தேர்தலில் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து இழுபறி நிலையில்
கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
30 அடி பள்ளத்தில் ஆட்டோ பாய்ந்ததில் ஒருவர் பலி; மூவர் படுகாயமடைந்தனர்
சடலத்தை கொண்டுவர வன்னி எம்.பி.நடவடிக்கை
மட்டக்களப்பில் நடமாடும் சேவையை மேற்கொள்ளும் திட்டம் தேர்தல் விதிக்கு முரண்
வவுனியா ஆஸ்பத்திரியில் இரு சடலங்கள் ஒப்படைப்பு
இலஞ்ச, ஊழல் மோசடிகளில் பொலிஸார் கிராம அதிகாரிகளுக்கே அதிகளவில் தொடர்பு
மின்னல் தாக்கி இளைஞன் பலி
விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட கணவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை
வவுனியா ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை
யானை தாக்கி 33 பேரும் 73 யானைகளும் மரணம்
47 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடமாட்டம் மொனறாகல காட்டுப்பகுதியில் தேடுதல்
விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மூன்று யுவதிகள் உட்பட ஐவர் கைது
கரை ஒதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளராக மகாசிவம் செயற்பட இடைக்காலத்தடை
கல்விப் புலத்தைப் பற்றி எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் முதலாம் தர மாணவர்கள் அனுமதியில் பல்வேறு குழப்ப நிலை
அராஜக ஆட்சியை ஒழித்துக்கட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நாளில் ஆரம்பமாகும்
உதிரிப்பாகங்கள் கிடைப்பதில் தாமதம் யாழ்.பஸ் சேவைகள் பெரிதும் பாதிப்பு
`15 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இன்னமும் நியமனம் இல்லை'
தங்கத்தின் விலை அதிகரிப்பால் யாழ். நகைத் தொழிலாளர் பாதிப்பு
வடபகுதியை சேர்ந்த மூவர் எதுவித விசாரணைகளுமின்றி தடுத்து வைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com