*மூவர் காயம்; புலிகள் தெரிவிப்பு
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கண்ணிவெடித் தாக்குதலில் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூன்று அதிரடிப் படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் ரோந்து சென்ற விசேட அதிரடிப்படையினரே இந்தக் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த அதிரடிப் படையினர் மூவரும் பின்னர் அம்பாறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.