*2 அதிரடிப் படையினர் , 2 பொதுமக்கள் காயம்
மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு பொலிஸார் கொல்லப்பட்டதுடன் இரு விசேட அதிரடிப்படையினரும் இரு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
படுவான்கரையில் வவுணதீவு- கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் வாழைக்கால் சந்தியிலேயே இந்தக் கிளைமோர் தாக்குதல் நேற்றுக்காலை 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த பொலிஸார் இருவரே இந்தக் கிளைமோர் தாக்குதலில் சிக்கி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அந்தச் சந்தியில் வீதிப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இருவரும் அவ்வீதியால் பயணம் செய்து கொண்டிருந்த இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் உடனடியாக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அந்தச் சந்தியில் தினமும் கடமையிலிருக்கும் விசேட அதிரடிப் படையினரை இலக்கு வைத்தே இந்தக் கிளைமோர் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வீதியால் பொலிஸார் வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வீதியோரத்தில் பற்றை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.