வன்னியில் நேற்று புதன்கிழமை காலை விமானப்படை விமானங்களும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
முல்லைத்தீவில் விமானப்படை குண்டுவீச்சு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திய அதேநேரம், மன்னாரில் `எம்.ஐ-24' ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்றுக் காலை 10.50 மணியளவில் விசுவ மடுக்குளம் பகுதியில் குண்டுவீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகளின் படகு கட்டும் நிலையம் மீது தாக்குதலை நடத்தி அதனை அழித்துள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே நடவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கு உதவியாக எம்.ஐ- 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் ஆலங்குளம் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள புலிகளின் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலிலும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருவதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.