இவ்வாறான படையணியை தற்போது களமுனைக்கு அனுப்பிவைக்கப்போகின்றார்களாம். களமுனை அதிரடிப்படைக்கு சோதனைக்களமாகவே அமையும். அவர்களின் வருகையை நாமும் எதிர்பார்த்துள்ளோம்.
புலம்பெயர் மக்களே எமது உந்து சக்தி. நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் வியர்வை எம்மால் வீணடிக்கப்படுவதில்லை
மிகவும் நுட்பமான கால கட்டத்தில் விடுதலைப் போரை எமது தலைவர் பிரபாகரன் நடத்துகிறார். தந்திரமான, சூட்சுமமான, இராஜதந்திர சுழிகள் நிறைந்த படை வல்லாதிக்க சூறாவளிகளுக்கு மத்தியில் விடுதலைப் போரை எமது தலைவர் தலைமையேற்று நடத்துகிறார். நாம் வெற்றிக் கொடி ஏற்றும் நாள் தொலைவில் இல்லை.
அதுவரை அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. அதனையே நாம் எதிர்பார்க்கிறோம்.