Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, March 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
சர்வதேச கிரிக்கெட் சபையினால் காவஸ்கருக்கு புதிய நெருக்கடி
[27 - March - 2008] [Font Size - A - A - A]
சர்வதேச கிரிக்கெட் சபை செயற்குழு உறுப்பினர்களின் வற்புறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சுனில் காவஸ்கருக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின், கிரிக்கெட் குழுத்தலைவராக 2000 ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகின்றார் காவஸ்கர். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிளைவ் வால் கொட் அப் பதவியிலிருந்து விலகியதற்குப் பின் காவஸ்கர் பொறுப்பேற்றார்.

சமீபகாலமாக ரி.வி.யில் வர்ணனையாளராகவும், பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகளும் அவர் எழுதிவருகிறார். இது, ஐசிசி - யின் கொள்கைக்கு எதிராகவுள்ளதாக கடந்த வாரம் டுபாயில் கூடிய செயற்குழு உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர். இதனால் அவர் தர்மசங்கடத்துக்குள் ளாகியுள்ளார். ஐசிசியில் இந்தியாவின் பலம் அதிகரிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.

ஏதாவது ஒருபதவியிலிருக்குமாறு காவஸ்கரை செயற்குழு கேட்டுள்ளது. அத்துடன் இவ்விரு பதவிகளில் ஏதாவது ஒன்றை அவரே தேர்வு செய்து கொள்ளட்டும் எனவும் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் கிரிக்கெட் குழு தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்துவிடலாம் எனத் தெரிகிறது.

இருந்தாலும் ஐசிசி- யின் முதன்மைச் செயல் அதிகாரி மால்காம் ஸ்பீடை சந்தித்த பிறகே காவஸ்கர் இறுதி முடிவு மேற்கொள்ளலாம் என ஐசிசி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளை `டைனோசர்ஸ்' என அவர் சமீபத்தில் வர்ணித்தது, செயற்குழு உறுப்பினர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.

காவஸ்கர் அவ்வாறு தெரிவித்திருந்தபோதிலும் தொடர்ந்து பணியாற்றுவதையே ஐசிசி விரும்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Email this page Your Opinion Print this page
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் தென்னாபிரிக்கா வலுவான நிலையில்
மேற்கிந்திய அணி வெற்றி பெறுவதற்கு 340 ஓட்டங்களை பெற வேண்டும்
டெஸ்ட் கிரிக்கெட்டும் சென்னை மைதானமும்
700 விக்கெட்டை வீழ்த்துவதே அடுத்த இலக்கென்கிறார் கும்பிளே
நியூசிலாந்து அணி 121 ஓட்டங்களால் தோல்வி இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது
தென்னாபிரிக்காவுக்கே அதிக வெற்றி
சர்வதேச கிரிக்கெட் சபையினால் காவஸ்கருக்கு புதிய நெருக்கடி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com