Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஜப்பான் ரயில்களில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை
[28 - March - 2008] [Font Size - A - A - A]
ஜப்பானின் ரயில்களில் முதியவர்களுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் . அவற்றை ஏனையோர் பயன்படுத்துவதால் அதனைக் கண்காணிக்க பொலிஸார் ரயில்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பான் புறநகர் ரயில்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் நின்று கொண்டு பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் ஆண், பெண் என்று எழுதி வைக்கப்படுவதில்லை. ஆனால், வயதானவர்கள், பெண்கள் வந்தால் இருக்கையை விட்டுத்தருவது பண்பாடாக கருதப்படுகிறது.

ஆனால், சமீபகாலமாக இளைய தலைமுறையினர் போக்கு மாறி வருகிறது. வயதானவர்கள் வந்தாலும் அவர்களுக்கு இடம் தருவதில்லை. இதனால், வயதானவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

வயதானவர்களுக்கு இடம் தர வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு ரயில்வே வேண்டுகோளும் விடுத்துப் பார்த்து விட்டது. ஆனால், வயதானவர்களை இளைஞர்கள் கண்டு கொள்வதே இல்லை.

இதையடுத்து, நடவடிக்கையில் பொலிஸ் துறை இறங்கியுள்ளது. இளைய தலைமுறையினரை சீர்திருத்த நன்னடத்தைப் பொலிஸ் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொலிஸாக நியமித்துள்ளது. அவர்களுடன் இப்போதுள்ள இளம் வயதுப் பொலிஸாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரயிலில் வயதானவர்களுக்கு இடம் தராமல் உட்கார்ந்திருக்கும் இளைஞர்களுக்கு நன்னடத்தை பொலிஸ் அறிவுரை கூறும். அந்த அறிவுரையைக் கேட்காமல் தொடர்ந்து இருக்கையில் உட்கார்ந்திருந்தால் வழக்கமான இளம் வயது பொலிஸ் தயாராக இருக்கும். அவர்கள் வந்து இளைஞர்களைப் பிடித்து வெளியேற்றி விடுவர்.

இந்தத் திட்டத்துக்கு வயதான ரயில் பயணிகளிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், இளைஞர்களுக்குத் தான் இடைஞ்சலாக உள்ளது. `எங்களுக்கு நன்னடத்தை சொல்லித்தர இப்படியா செய்வது? என்று தெரிவிக்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
தலாய் லாமாவுடன் பேச சீனா மறுத்தால் ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் புறக்கணிக்கும்
மன்னரின் வெளியுறவுக் கொள்கையே தொடருமென பூட்டான் ஆளும் கட்சி அறிவிப்பு
மைலாய் படுகொலை கொடூரத்தை நினைவு கூரும் வியட்நாம் மக்கள்
ஜப்பான் ரயில்களில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை
ஈராக்கில் பலியான அமெரிக்க வீரர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள புஷ்
ஸியா ஆயுதக் குழுக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் ஈராக்கில் கடும் மோதல்கள்; இது வரை 30 பேர் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com