Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
[28 - March - 2008] [Font Size - A - A - A]
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் கிராமசேவை மற்றும் திடீர் மரண விசாரணைகள் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டுமென்று தெரிவித்துள்ள இ.தொ.ஐ.மு.தலைவர் டி.சென்னன் மேற்கண்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுவோர் தமிழ்மொழி மூலம் கடமையாற்ற கூடியவர்களாக இருக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரியவிற்கு மகஜரொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அரசுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டாயிரம் பேருக்கு ஒருவரென்றடிப்படையில் கிராமசேவக அதிகாரிகளை நியமிக்க அரசு இணக்கம் தெரிவித்தது.

அவ்வேளையில், நாம் அரசுக்கு மீண்டும் அழுத்தங்களைக் கொடுத்ததுடன் இரண்டாயிரம் பேருக்கு ஒரு கிராமசேவை அதிகாரியினால் கடமையாற்றுவதென்பது இயலாத விடயமென்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அரசு எமது கோரிக்கையை ஏற்று ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் கிராமசேவை அதிகாரிகளுக்கு நியமனங்களை வழங்கியது. அதன்பிரகாரம் ஊவா மாகாணத்திற்கு 32 பேரை நியமிக்க ஏற்பாடகியிருந்தபோதிலும் 27 கிராமசேவை அதிகாரிகளுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்திற்கு 69 பேரை நியமிக்க ஏற்பாடாகியிருந்தபோதிலும் 53 கிராமசேவை அதிகாரிகளுக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாத்தளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கும் தமிழ் கிராமசேவை அதிகாரிகள் எவருமே நியமிக்கப்படவில்லை.

வழங்கப்பட்டிருக்கும் ஊவா மற்றும் நுவரெலியா பகுதி பெருந்தோட்டங்களுக்கான கிராமசேவை அதிகாரிகள் 21 பேருக்கான வெற்றிடங்கள் 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து வந்தது. ஆனால், 2008 ஆம் ஆண்டு வரைக்குமான ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்டங்களில் மக்கள் தொகை மேலும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பிற்கமைய கிராமசேவை அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.

அத்துடன், மாத்தளை, கண்டி, இரத்தினபுரி போன்ற தோட்டப்பகுதிகளுக்கு கிராம சேவை அதிகாரிகள் நியமிக்கும் விடயத்திலும் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

அத்துடன், மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் விவாகப் பதிவாளர்கள் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கடமையில் இல்லாததால் தோட்டப் பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுவிடயத்திலும் தாங்கள் கூடிய அக்கறை செலுத்தி ஆயிரம் பேருக்கு ஒரு விவாகப் பதிவாளர் மற்றும் திடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்கவும் துரித நவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com