காலி ஹிக்கடுவ கடற்கரையில் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பத்து படகுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இந்த படகுகள் குறித்து காலி மாவட்ட கடல் தொழில் அதிகாரி கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இப்படகுகளை இங்கு நிறுத்தியவர்கள் யார், இவற்றின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
டைனமைற் வெடி மூலம் மீன்பிடிப்பவர்கள் அல்லது வெளிமாவட்ட மீனவர்கள் இப்படகுகளை இங்கு நிறுத்தி வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இவற்றின் உரிமையாளர்களை பொலிஸாரும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் தேடிவருவதுடன் இதுபற்றி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் இவற்றை உரியவர்கள் பொறுப்பேற்காவிட்டால், நீதிமன்றத்தின் மூலம் அரசுக்கு சொந்தமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலர் இந்தப் படகுகளை வந்து பார்வையிட்டு செல்வதையும் காண முடிகிறது.