|
பெரும் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி பாதையை விட்டு விலகி ஐநூறு அடி பள்ளத்தில் பாய்து விபத்திற்குள்ளாகியதில், லொறிச் சாரதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் இவ்விபத்து, பசறைக்கும் நமுனுகவைக்குமிடைப்பட்ட மவுசாகொல்லை என்ற இடத்தில் கடந்த 24 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.
பசறையைச் சேர்ந்த 45 வயதுடைய எஸ்.டி.ஜயசேன என்பவரே விபத்தின் போது பலியானவராவார்.
இவ் விபத்து தொடர்பாக, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.பி.கலன்சூரிய தலைமையிலான குழுவினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். |