அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் நிரந்தரமாக வசிக்கும் சுனாமி, யுத்த அனர்த்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றம் 3 ஆண்டு செயல்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் முயற்சிகளுக்கான சிறுகடன்களும் நடுத்தரக் கடன்களும் வழங்கப்படவிருப்பதாக திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 43 கிராமசேவகர் பிரிவுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களை 0652246677 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.