மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவந்த அடைமழை ஓய்ந்துள்ள அதேவேளை, நுளம்புகளின் பெருக்கம் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. நுளம்புகளால் பரவும் நோய்கள் ஏற்படும் என அச்சமடைந்துள்ள மக்கள் நுளம்புகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மட்டக்களப்பில் பெய்த அடைமழை காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. மழைநீர் வற்றியதும் தற்போது நுளம்புகளின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மாலை 5 மணியில் இருந்து நுளம்புத் தொல்லை ஏற்படும் நிலையில் பெரிய மற்றும் சிறிய வகையான நுளம்புகள் பெருகியுள்ளன. இந்நுளம்புகள் குத்தும் இடத்தில் உடனடியாக பெரிய தடிப்பு ஏற்படுகின்றது. இரவு நேரத்தில் மக்கள் எதனையும் செய்ய முடியாத நிலையிலும் மாணவர்கள் படிக்கமுடியாத நிலையிலும் உள்ளனர்.
நுளம்புகளின் பெருக்கத்தால் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் என அச்சமடைந்துள்ள மக்கள் இதனை தடுக்க சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.