|
அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டம் குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா கடற்றொழில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் பயனாக இபாட்(IFAD) திட்டத்தின் கீழ் 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மூலம் கல்முனை, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர் உட்பட 11 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய கரையோரப் பிரதேச செயலகங்களில் படகு நங்கூரமிடும் தளங்கள், வள்ளங்கள், மற்றும் வலை திருத்தும் நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், மீனவர்களுக்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இத்திட்டத்தின் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதி அமைச்சர் குறித்த இடங்களுக்கு அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்டதாகவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார். |