Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
[28 - March - 2008] [Font Size - A - A - A]
* மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடைமழையால் 2007/2008 ஆம் ஆண்டு காலபோகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையும் மேட்டுநிலப் பயிற்செய்கையும் பெரிதும் அழிந்துபோயுள்ளதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ம. ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;

நெற்செய்கையைப் பொறுத்தவரை மாவட்டத்தில் மொத்தமாக செய்கை பண்ணப்பட்ட 5,855 ஹெக்டேரில் (14,637ஏக்) மழைவெள்ளத்தால் 4835 ஹெக் (12,087 ஏக்) நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.

இவற்றை பிரதேச ரீதியாக நோக்கும்போது நானாட்டன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நெற்பயிற்செய்கையில் மொத்தமாக செய்கை பண்ணப்பட்ட 5080 ஹெக்டேரில் (12,700 ஏக்) 4200 ஹெக்டேர் (10,500 ஏக்) மழையினால் அழிவடைந்துள்ளது.

மன்னார் தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட 560 ஹெக்டேரில் (1,400 ஏக்) 475 ஹெக்டேர் (1,187 ஏக்) செய்கை மழையினால் பாதிப்படைந்துள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட 215 ஹெக்டேரில் (537.5 ஏக்) 160 ஹெக்டேர் (400 ஏக்) நெற்செய்கை மழையினால் பாதிப்படைந்துள்ளது.

மாவட்டத்தில் இக்காலபோகத்தில் மொத்தமாக எதிர்பார்க்கப்பட்ட 28,925 மெற்றிக்தொன் அறுவடையில் இற்றைவரை 6120 மெற்றிக்தொன் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதி 22.805 மெற்றிக்தொன் நீரில் மூழ்கியுள்ளது. இதில் தற்போது மேற்கொள்ளப்படும் 50% மான நெல் அறுவடையில் நெல் நிறம் குறைந்தும் முளைத்தும், மடி நெல்லாகவும் காணப்படுகின்றது. இதனை அறுவடைசெய்து சூடடிக்கும் இடத்திற்கு கொண்டு வருவதற்கு 1 ஏக்கருக்கு ரூபா 10,000 தொடக்கம் ரூபா12,000 வரை செலவாகின்றது.

தற்போது இங்கு அறுவடைக்கு பெரும் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதுடன் வயலில் நீர் நிற்பதால் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை செய்ய முடியாத நிலையுமுள்ளது. மேலும் மீதி 50% நெற்பயிர்கள் மழையினால் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இக்காலபோகத்தில் ஈடுபட்ட 2110 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட 2370 ஹெக்டேர் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையில் 1840 ஹெக்டேரில் பயிர்ச்செய்கை மன்னார் பட்டினம், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் மழையினால் பாதிப்படைந்துள்ளது. இதனால், இப்பயிற்செய்கையில் ஈடுபட்ட 1390 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

கடந்த 15.03.2008 தொடக்கம் 23.03.2008 வரையான காலப்பகுதியில் தொடர்ந்து பெய்த இம் மழையின் அளவு சராசரியாக 23.0.மி.மீ. இருந்து 61.9 மி.மீ.வரை நீடித்தது.

மழையினால் பாதிப்படைந்துள்ள உயிலங்குளம் நானாட்டன், முருங்கன் பகுதி விவ சாயிகள் நிவாரணம் வேண்டி தங்கள் பகுதிகளுக்குரிய பிரதேச செயலகங்களையும் கமநலகேந்திர நிலையங்களையும் நாடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளில் கடனடிப்படையில் பணத்தைப் பெற்று தங்கள் நகைகளை அடகு வைத்தும் இக்காலபோகத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதனால், இம்மழையினால் ஏற்பட்டுள்ள பயிற்செய்கை அழிவினால் விவசாயிகள் மனவிரக்த்தியுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட விவசாய கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்து கடன்தொகையை மட்டும் செலுத்த ஆவன செய்யுமாறு வங்கிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com