அம்பாறை மாவட்டத்தில் மேலும் ஆறு டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சகல விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதுடன், நுளம்புகள் காணப்படும் வெள்ளநீர் தேங்கி உள்ள இடங்களை சிரமதானம் மூலம் துப்புரவு செய்வதற்கான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதாக கல்முனை கரையோர பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் எம்.சி.எம்.மாஹிர் தெரிவித்துள்ளார்.