மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு 9.15 மணியளவில் இடம் பெற்றிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளியடி வீதி, ஏறாவூர் எனும் முகவரியில் வசித்து வந்த நூர்முகமட் முகம்மது அன்வர் என்பவரது வீட்டின் மீதே கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற பொழுது இவர் வீட்டிலிருக்கவில்லை எனவும் வீட்டின் கதவு, ஜன்னல், சுவர் என்பன சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.