அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக் கிழமை நிதியமைச்சு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழு ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.
எனினும், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அவசர கூட்டமொன்றில் கலந்துகொள்ள வேண்டியேற்பட்டதால் சம்பள முரண்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததாக தேசிய சம்பள ஆணைக்குழு தெரிவித்தது.
எதிர்வரும் 2 ஆம் திகதி திட்டமிட்டபடி அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.