அமைச்சு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்றுக்காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயம் திடீரென உயிரிழந்தார்.
காலையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அமைச்சு பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் பெரேரா தெரிவித்தார்.
மேலும், வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு மரணமானவராவார்.