கந்தப்பளை தோட்டமொன்றில் நேற்று வியாழக்கிழமை மாலை பெருமளவு வெடிபொருட்களும் ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தோட்டத்திலிருந்து 26 கிலோ `சி.4' ரக வெடிமருந்தும், நான்கு தற்கொலைத் தாக்குதல் அங்கிகளும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து அப்பகுதியிலிருந்து ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அப்பகுதியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்தப்பகுதியில் பரபரப்பேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.