* நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் ரவீந்தர பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.