* முதலமைச்சர் தெரிவிப்பு
மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களிடமிருந்தும் நுழைவுக் கட்டணமொன்றை அறவிடத் தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
சீதாவக்க (அவிசாவளை) பிரதேச சபையின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேல்மாகாணத்திற்குள் தினமும் 10 இலட்சம் வாகனங்கள் பிரவேசிக்கின்றன. இதனால், பாரதூரமான போக்குவரத்து நெரிசலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கைக்கு ஜனாதிபதியும் அனுமதி வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.