துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் வவுனியா அரசினர் வைத்தியசாலை சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்ட இரண்டு சடலங்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை வன்னிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்மடு - முன்னணி காவலரண் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலில் மரணமான புலி உறுப்பினர்களுடைய சடலங்களே இவையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர் என அடையாளம் காணக் கூடிய தகடுகளும் சடலங்களில் காணப்பட்டது. அத்துடன் சயனைட் குப்பிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மாவட்ட நீதிபதியின் விசாரணையின் பின்னர் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விரு சடலங்களையும் கனகராயன்குளத்தில் வைத்து புலிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.