ஹிக்கடுவ - மகாமாய மகளிர் பாடசாலையின் மாணவிகளுக்கு பூச்சி மருந்து கொடுக்கப்பட்டதையடுத்து 14 மாணவிகளுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை காலை சுகாதார வைத்திய அதிகாரியினால் பாடசாலையில் வைத்து பூச்சி மருந்து கொடுக்கப்பட்டது.
இந்த மருந்தினால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்துவிடும் எனவும் அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.
பூச்சி மருந்தைக்குடித்த சில மணி நேரத்தில் சில மாணவிகள் தமக்கு வயிற்றுவலி என்று அதிபரிடம் கூறினார்கள்.
இவர்களில் 14 பேர் வயிற்றுவலி தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து நால்வர் காலி கராப்பிட்டி ஆஸ்பத்திரியிலும் 10 பேர் ஆராய்ச்சிகந்த ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பிட்ட சில மாணவிகளுக்கு இந்த மருத்தினால் வயிற்றுவலி ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இச்சம்வத்தையடுத்து இப்பிரதேசத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பூச்சி மருந்து கொடுப்பதற்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.