Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
[28 - March - 2008] [Font Size - A - A - A]
* விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

மணலாறு பகுதியில் கடந்த இரு நாட்கள் இடம்பெற்ற கடும் சமரில் 15க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் கடும் சமர் நடைபெற்றுள்ளது.

இந்தப் பகுதியிலிருந்து படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட போது

அதற்கெதிராக தாங்கள் கடும் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தக் கடும் சமரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு படை நகர்வு முறியடிக்கப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரது சடலம் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

இதேநேரம், செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் பாரிய முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்ட படையினர் மீது நடத்தப்பட்ட கடுமையான பதில் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ரி. 56 ரகத் துப்பாக்கி ஒன்று, 18 -ரவைக் கூடுகள், 4000- ரவைகள், ஆயுதங்கள், தாங்கும் மேலங்கிகள்- நான்கு, ஐந்து தலைக்கவசங்கள், இரு கத்திகள், நான்கு இராணுவப் பைகள், ஆறு நீர்க்கான்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
வர்த்தக நிலுவை பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரிப்பு
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் சுடப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது
ஐ.நா.வில் திபெத் நெருக்கடி குறித்து விவாதிப்பதை சீனா தடுத்ததற்கு இலங்கை உட்பட 5 நாடுகள் ஆதரவு
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு
இஸ்ரேலிய கிபிர்களுடன் சீனத் தயாரிப்பான எவ்-7 ரக விமானங்கள் வன்னியில் தாக்குதல்
அம்பாறை மத்திய முகாம் பகுதியில் இருவர் சுட்டுக்கொலை; ஒருவர் படுகாயம்
இலங்கையின் ஆயுதக் கொள்வனவு இந்தியா கடும் விசனம் தெரிவிப்பு
பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதக்களைவு நியாயமற்றது
மணலாற்றில் இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் படையினருக்கு அதிக இழப்பு
தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் மீட்பு
வவுனியாவுக்கும் மதவாச்சிக்குமிடையே விசேட பஸ்சேவை நடத்த இணக்கம்
பூச்சி மருந்து குடித்த 14 மாணவிகளுக்கு வயிற்றுவலி
புலிகளின் இரு சடலங்கள் வன்னியில் ஒப்படைப்பு
25% பாடசாலைகளில் இன்னமும் முதலாம் தர அனுமதி பூர்த்தியாகவில்லை
குடும்பப் பெண்ணொருவருடன் தகாத முறையில் ஈடுபட முயன்ற இரு பொலிஸார் மீது நடவடிக்கை
5 வருடங்களாக கொழும்பில் வசிக்கும் பெண் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவுக் கட்டணம் அறவிடப்படும்
கற்குழி வெடி விபத்தில் மூவர் படுகாயம்
இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி ராமதாஸ், திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகேஸ்வரன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு
யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு
கந்தப்பளைத் தோட்டத்தில் வெடிமருந்து மீட்பு
பொறி வெடிகளில் சிக்கி 4 படையினர் பலி
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
மட்டக்குளி பஸ்ஸில் பயணி மீது தாக்குதல்
அமைச்சு பாதுகாப்பு பிரிவு கான்ஸ்டபிள் உயிரிழப்பு
`மூதூர் நிலைமை மோசமாக இருப்பதால் தனியாக வரமுடியாதென கூறினார் கேதீஸ்வரன்'
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரணியில் 3 தமிழ் கட்சிகள் போட்டி
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
லிபியாவில் 1 இலட்சம் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு பெற உடன்படிக்கை
கொலைகள் தொடர்பாக விசாரணை செய்ய சென்ற போது காந்திசிலையருகில் 7 வெற்று ரவைகளை மீட்டேன்
சொந்த இடத்தில் அகதிகளாக மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள்
மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் கடல்கோளில் காணாமல்போனவரல்ல
ஏறாவூரில் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு
மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டுமென கடும் வலியுறுத்தல்
அம்பாறையில் 6 பேருக்கு டெங்கு
மன்னார் மாவட்டத்தில் அடை மழையினால் நெற்செய்கையும் மேட்டு நிலச்செய்கையும் அழிவு
அம்பாறை மீனவர்களுக்காக 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
மீராவோடை இராணுவத்தினரால் கைதான இரு சந்தேக நபர்களும் நீதிமன்றால் விடுதலை
அடைமழை ஓய்ந்ததைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு
சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தால் 3 ஆண்டு செயல்திட்டம் அமுல்
புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை தருவிக்க ஏற்பாடு
லொறி 500 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி மரணம்
ஹிக்கடுவ கடற்கரையில் கைவிடப்பட்ட படகுகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது
தோட்டப் பகுதிகளுக்கு தமிழ்மொழி தெரிந்த கிராமசேவை அதிகாரிகளை நியமிக்க கோரி மகஜர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com