சவூதி அரேபிய அரசாங்கம் 2.5 பில்லியன் செலவில் தேசிய வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய காக்கை வலிப்பு வைத்தியசாலை ஒன்றை அமைக்க நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்றபோது அவ்வைத்தியசாலையின் மாதிரியை தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க மற்றும் சவூதி அதிகாரிகள் பார்வையிடுவதையும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு சவூதி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் யூசுப் ஹை ஞாபகச் சின்னம் வழங்குவதையும் காண்கிறீர்கள்.த்
சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சின் நிதியின் மூலம் டிக்கோயா போடைஸ் என்.சி. பிரிவு (புதுக்காடு) தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைப்பதையும் அமைச்சின் செயலாளர் யு.ஏ.செனவிரத்ன மங்கள விளக்கேற்றுவதையும் இங்கு காணலாம்.