Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கிரிக்கெட் மைதானங்களில் வார்த்தைப் போரை தடுக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஐ.சி.சி.
[28 - March - 2008] [Font Size - A - A - A]
வார்த்தைப் போரை தடுக்க ஐ.சி.சி. அதிரடி முடிவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்துவது கப்டன்களின் பொறுப்பென அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

கிரிக்கெட்டில் சமீபகாலமாக வார்த்தைப் போர் அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகளில் சர்ச்சைகள் அதிகம் வெடித்தன. இதில் இந்திய வீரர்களே அதிகம் பாதிக்கப்பட்டதால், வார்த்தைப் போர் மற்றும் ஆடுகளத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளுதல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) முயற்சித்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) இதற்கான சட்டத்தை விரைவில் அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஐ.சி.சி.இது தொடர்பாக அனைத்து கிரிக்கெட் சபைகள் மற்றும் கப்டன்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

ஐ.சி.சி. 10 டெஸ்ட் அணிகளின் கப்டன், கிரிக்கெட் சபைகள், எலைற் பனல் நடுவர்கள் மற்றும் 7 போட்டி நடுவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதில் கிரிக்கெட்டின் எழுச்சியை காப்பதில் வீரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் அணியை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டியது கப்டனின் கடமை. களத்தில் சர்ச்சைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கப்டனின் பொறுப்பு. வீரர்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, ஜாடையால் வம்பிழுப்பது போன்றவைகள் தான் சர்ச்சைகளின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. ஒவ்வொரு வீரர்களும் தங்களுக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு `ரோல் மொடலாக' திகழக்கூடியவர்கள். இதனால், இவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கப்டன்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அணியை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

வீரர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். சர்வதேச போட்டியில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒவ்வொருவரும் அடுத்தவரை மரியாதையாக நடத்த வேண்டும். நடுவர்களும் இவ்விவகாரத்தில் முழு ஈடுபாடு காட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
இந்திய அணி 82 ஓட்டங்கள்
மேற்கிந்திய மண்ணில் முதல் வெற்றி இலங்கை அணி சாதனை படைத்தது
சென்னையில் சச்சின், டிராவிட் புதிய சாதனைகள் படைப்பார்களா?
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் புதிய நெருக்கடிகளை சந்திக்கும் சீனா
அக்தர், கனேரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லை
`சும்மா அதிருதில்ல' ரஜினி ரசிகர் நிற்னி
ஐ.பி.எல். போட்டி டிக்கெட் விநியோகம் ஷாருக்கான் மீது நீதிமன்றில் வழக்கு
கிரிக்கெட் மைதானங்களில் வார்த்தைப் போரை தடுக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஐ.சி.சி.
டால்மியா கைதாகி விடுதலை
ஐ.சி.எல்.லிற்கும் ஐ.பி.எல்.லிற்குமிடையே போட்டிகளை நடத்தலாமென யோசனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com