ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விநியோகம் தொடர்பாக ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பொலிவூட் நடிகருமான ஷாருக்கான் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இந்திய பிரிமியர் லீக்கை தொடங்கியுள்ளது. இதில் கொல்கத்தா அணியை பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது `ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ற்' நிறுவனத்தின் மூலம் விலைக்கு வாங்கியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் ஷாருக்கான் மற்றும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் மீது மேற்கு வங்க கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்காமல் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் போட்டியை நடத்த மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு உரிமையில்லையென உத்தரவிடக் கோரி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேற்கு வங்க கிரிக்கெட் சங்க விதி 15 இன் இரண்டாவது பிரிவின் கீழ் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்கள் உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்றிருப்பதை அவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.