தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நிற்னி, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பரம ரசிகராம்.
`பாபா', `சிவாஜி' படங்களை நிற்னி ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்துள்ளார். `பாபா' முத்திரையையும் சிவாஜியில் வரும் `என் பேரை கேட்டா சும்மா அதிருதில்ல' என்ற வசனத்தையும் மனப்பாடம் செய்துள்ளார்.
அவரிடத்தில் யார் சென்றாலும் பாபா ஸ்ரைலில் விரல்களை மடக்கி `சும்மா அதிருதில்ல' என்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அமோக வரவேற்புள்ளது.