பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் மற்றும் டனிஷ் கனேரியா ஆகியோர் மீது மென்மையான போக்கை கையாள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு விளக்கமளிக்க அவர்கள் இருவருக்கும் ஒருவார கால கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான புகார்களில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நாஜிம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
சகவீரர் ஒருவரைத் தாக்கியதாக சொயிப் அக்தர் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.