Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, March 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் புதிய நெருக்கடிகளை சந்திக்கும் சீனா
[28 - March - 2008] [Font Size - A - A - A]
வட அமெரிக்காவில் ஒலிம்பிக் தீப ஊர்வலத்தின் தூரத்தை 8 மைல் தூரத்திலிருந்து 6 மையில்களாக குறைக்குமாறு சான்பிரான்சிஸ்கோ நிர்வாகத்தை சீனா கேட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புகள் ஒலிம்பிக் தீப பயணத்தின் போது சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்தே சீனா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஒலிம்பிக் தீபத்தின் பயணம் நடைபெறவுள்ளது. அப்போது திபெத் பிரச்சினையில் சீனாவின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மனித உரிமை அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்த ஊர்வலம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளி பரப்பாகவுள்ளது. அப்போது தர்மசங்கடமான நிகழ்வுகள் நிகழாமல் தடுப்பதற்காக ஒலிம்பிக் ஜோதி பயணத்தை குறைத்துக் கொள்ளுமாறு சான்பிரான்சிஸ் கோவை சீனா கேட்டுள்ளது.

இதனிடையே சான்பிரான்சிஸ்கோ மேற்பார்வையாளர் டாம் அமியானோ நேற்று முன்தினம் ஒலிம்பிக் ஜோதியின் பயணம் குறித்த விபரங்களை வெளியிடுமாறு மேயர் மற்றும் பொலிஸாரை கேட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
இந்திய அணி 82 ஓட்டங்கள்
மேற்கிந்திய மண்ணில் முதல் வெற்றி இலங்கை அணி சாதனை படைத்தது
சென்னையில் சச்சின், டிராவிட் புதிய சாதனைகள் படைப்பார்களா?
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் புதிய நெருக்கடிகளை சந்திக்கும் சீனா
அக்தர், கனேரியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லை
`சும்மா அதிருதில்ல' ரஜினி ரசிகர் நிற்னி
ஐ.பி.எல். போட்டி டிக்கெட் விநியோகம் ஷாருக்கான் மீது நீதிமன்றில் வழக்கு
கிரிக்கெட் மைதானங்களில் வார்த்தைப் போரை தடுக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள ஐ.சி.சி.
டால்மியா கைதாகி விடுதலை
ஐ.சி.எல்.லிற்கும் ஐ.பி.எல்.லிற்குமிடையே போட்டிகளை நடத்தலாமென யோசனை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com