இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முதுலில் ஆடிய தென்னாபிரிக்க அணி தனது முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 540 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அம்லா- 159, மக்கன்ஷி- 94, ஸ்மித் -73, பௌச்சர் -70, டிவில்லியர்ஸ்- 44, மோர்கல்- 35, பிறின்ஸ்- 23 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் ஹர்பஜன் சிங்- 5, கும்பிளே-2, ஷ்ரீசாந்த் மற்றும் ஷேவாக் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து தனது முதல் இனிங்ஸில் ஆடும் இந்தியஅணி நேற்றைய 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ஷேவாக்- 52, ஜாபர்- 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.