|
வவுனியா, மன்னார் வீதியிலுள்ள பம்பைமடுப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் குண்டு வெடித்ததிலேயே வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த படை வீரர் உயிரிழந்தார். தாக்குதல் சம்பவத்தையடுத்து மேலதிக படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் நடத்தினார்கள். |