வவுனியா குட்செட் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் சம்பவததில் ஆறு பொதுமக்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு பொலிஸார், இரண்டு ஊர் காவற்படையினர், ஆறு பொது மக்கள் இந்தக் கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படையினரின் துணையுடன் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
துவிச்சக்கர வண்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டே வெடித்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பெருமளவு பொலிஸாரும் படையினரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.