Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
தெற்காசிய உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டி ஜூனில் இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறும்
[03 - March - 2008] [Font Size - A - A - A]
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சாம்பியன் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் மாலைதீவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளது.

மேற்படி சாம்பியன் போட்டியின் ஆரம்பவைபவம் ஜூன் மாதம் 3 ஆம் திகதி மாலைதீவில் நடைபெறும். இப்போட்டியில் இலங்கை இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கு பற்றுகின்றன.

இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஏ-பிரிவு : இந்தியா, நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான்

பி-பிரிவு : இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான்

ஏ-பிரிவு ஆட்டங்கள் மாலைதீவிலும் பி-பிரிவு ஆட்டங்களும் இறுதி ஆட்டங்களும் இலங்கையிலும் நடைபெறும்.

ஆரம்ப நாளான ஜூன் 3 ஆம் திகதி, இந்தியா எதிர் நேபாளமும் மாலைதீவு எதிர் பாகிஸ்தான் அணிகளும் போட்டியிடும். இப்போட்டிகள் மாலைதீவில் நடைபெறும்.

ஜூன் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச, விளையாட்டு அரங்கில், பங்களாதேஷ் எதிர் பூட்டான் அணிகளும், இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளும் போட்டியிடும்.

ஜூன் 5 ஆம் திகதி இந்தியா எதிர் பாகிஸ்தான் அணிகளும் நேபாளம் எதிர் மாலைதீவு அணிகளும் போட்டியிடும்.

ஜூன் 6 ஆம் திகதி பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளும் இலங்கை எதிர் பூட்டான் அணிகளும் போட்டியிடும்.

அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் மாதம் 11 ஆம் திகதி மாலைதீவிலும் கொழும்பிலும் நடைபெறும்.

இந்த அரை இறுதி ஆட்டங்களில் ஏ-பிரிவில் வெற்றி பெறும் அணியும், பி-பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெறும் அணியும் மாலைதீவில் போட்டியிடும்.

2 ஆவது அரை இறுதி ஆட்டத்தில் பி-பிரிவில் வெற்றி அணியும் ஏ-பிரிவில் 2 ஆம் இடத்தைப் பெற்ற அணியும் போட்டியிடும். இப்போட்டி கொழும்பில் நடைபெறும்.

மேற்படி இரு அரை இறுதி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையிலான, இறுதி ஆட்டமும் 3 ஆம் இடத்துக்கான ஆட்டமும் ஜூன் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.

இம்முறை இப்போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான 1 ஆவது போட்டி 1993 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை 1-0 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியது.

2 ஆவது போட்டி 1995 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி இந்திய அணியை 1-0 கோலினால் தோற்கடித்து முதல் தடவையாக சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

3 ஆவது போட்டி 1997 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மாலைதீவு அணியை 5-1 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

4 ஆவது போட்டி 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் கோவா நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 2-1 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

5 ஆவது போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி மாலைதீவு அணியை 2-1 கோல்களினால் வெற்றி பெற்று முதல் தடவையாக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

6 ஆவது போட்டி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 2-0 கோல்களினால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

தெற்காசிய நாடுகளிடையே இதுவரை நடைபெற்று முடிந்த 6 சாம்பியன் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில், இந்திய அணி 4 தடவைகள் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்போட்டி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி
அக்ரமின் சாதனையை முறியடித்த பின்னர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு லோசன் அழைப்பு
டெஸ்ட் போட்டியில் 52 வருட கால சாதனையை தென் ஆபிரிக்காவின் ஸ்மித் - மெக்கன்ஸி ஜோடி முறியடித்தது
தெற்காசிய உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டி ஜூனில் இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறும்
சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com