Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, March 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
டெஸ்ட் போட்டியில் 52 வருட கால சாதனையை தென் ஆபிரிக்காவின் ஸ்மித் - மெக்கன்ஸி ஜோடி முறியடித்தது
[03 - March - 2008] [Font Size - A - A - A]
டெஸ்ட் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு 413 ஓட்டங்கள் குவித்து, இந்தியாவின் 52 ஆண்டு கால சாதனையை தென் ஆபிரிக்க ஜோடியான கப்டன் ஸ்மித் - மெக்கன்ஸி நேற்று முன்தினம் முறியடித்துள்ளது.

மறைந்த இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்கள் வினு மன்காட், பங்கஜ்ராய் ஆகியோர், 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 413 ஓட்டங்கள் குவித்ததே முதல் விக்கெட்டுக்கு ஒரு ஜோடி எடுத்த அதிகூடிய ஓட்டமாக கடந்த 52 ஆண்டு காலமாக உலக சாதனையாக இருந்தது.

இந்தச் சாதனையை முறியடிக்க 2006 ஆம் ஆண்டு ராவிட் - ஷேவாக் இணைக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு 410 ஓட்டங்கள் எடுத்து மயிரிழையில் சாதனையை நழுவவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய ஜோடியின் நீண்ட கால சாதனையை தென் ஆபிரிக்க வீரர்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

தென் ஆபிரிக்க - பங்களாதேஷ் அணிகளிடையே 2 ஆவது டெஸ்ட் போட்டி சிட்ட கொங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா முதல் இனிங்ஸில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 405 ஓட்டங்கள் குவித்தது. கப்டன் ஸ்மித் 223 ஓட்டங்களுடனும் மெக்கன்சி 169 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 ஆவது நாள் ஆட்டம் நடந்தது. 3 ஆவது ஓவரில் 413 ஓட்டங்களை கடந்து இவர்கள் புதிய உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்மித், அப்துர் ரசாக் பந்தில் போல்ட்டானார். அவர் 232 ஓட்டங்கள் (277 பந்து) குவித்தார். ஸ்மித் - மெக்கன்சி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 415 ஓட்டங்கள் குவித்தது.

இதன் பின்னர் மெக்கன்சி தனது முதலாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ஒரே இனிங்ஸில் இரட்டை சதம் அடித்தது இது 2 ஆவது முறையாகும். இதற்கு முன் அவுஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வில்லியம்ஸ் லாவ்ரி (201 ஓட்டங்கள்) மற்றும் ரொபர்ட் சிம்சன் (210 ஓட்டங்கள்) ஆகியோர் 1965 ஆம் ஆண்டு பார்படோசில் நடந்த மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் தென் ஆபிரிக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 7 விக்கெட் இழப்புக்கு 583 ஒட்டங்கள் குவித்து தென்ஆபிரிக்கா முதல் இனிங்சை டிக்ளேர் செய்தது. 388 பந்துகளில் 226 ஓட்டங்கள் குவித்த மெக்கன்சி (28 பவுண்டரி, 3 சிக்சர்) ஷகதத் ஹூசைன் பந்தில் போல்டானார். அம்லா 38 ஓட்டங்களும், கலிஸ் 39 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது) எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் ஷகதத் ஹூசைன் 3 விக்கெட்டுகளும் முகமத் ரபீக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். கடைசி டெஸ்டில் ஆடி வரும் ரபீக் டெஸ்டில் தனது 100 ஆவது விக்கெட்டை நேற்று முன்தினம் கைப்பற்றினார்.

தொடர்ந்து தனது முதல் இனிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்தது. இந்த 3 விக்கெட்டுகளையும் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் வீழ்த்தினார். டெஸ்டில் 100 விக்கெட்டுகளை (20 ஆவது டெஸ்டில்) வீழ்த்திய சிறப்பையும் இவர் பெற்றார்.

Email this page Your Opinion Print this page
அவுஸ்திரேலியாவுடனான முதல் இறுதியாட்டம் 6 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்போட்டி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி
அக்ரமின் சாதனையை முறியடித்த பின்னர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுங்கள் அவுஸ்திரேலிய அணிக்கு லோசன் அழைப்பு
டெஸ்ட் போட்டியில் 52 வருட கால சாதனையை தென் ஆபிரிக்காவின் ஸ்மித் - மெக்கன்ஸி ஜோடி முறியடித்தது
தெற்காசிய உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டி ஜூனில் இலங்கையிலும் மாலைதீவிலும் நடைபெறும்
சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com