* முரளிதரன் கூறுகிறார்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற வேண்டுமென்று விரும்புவதாக இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திலேிய வீரர் ஷேன் வோர்னின் சாதனையை முறியடித்துள்ள முரளிதரன் வோர்ணை பின் பற்றி தாமும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் அக்ரமின் சாதனையை முறியடிக்க இன்னும் 39 விக்கெட்டுகளே தேவை என்றும், அதை அடைந்த பின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகப் போவதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போது 36 வயதாகும் தான் அதிகளவு பந்துகளை வீசி மிகவும் களைப்படைந்திருப்பதாகக் கூறினார். எதிர்காலத்தில் அறப்பணிகளில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.