|
கலைஞன்
பிரபாகரன் திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்பதில் ஹம்சா தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் இலங்கையின் துணைத் தூதுவர் ஹம்சாவையும் இலங்கைத் துணைத் தூதரகத்தையும் தமிழகத்திலிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கைத் துணைத் தூதரகத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவ்வளவு தூரத்துக்கு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ்பிரபாகரன்ீ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளைப் பார்ப்போம்.
வகுப்பில் ஆசிரியரொருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் பாடத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் சில போராளிகள் ஆவேசமாக வகுப்பறைக்குள் நுழைகின்றனர்.
அதேவேகத்தில் அங்கிருந்த மாணவர்களை இழுத்துக் கொண்டு வெளியேறுகின்றார்கள். பதறிப்போன ஆசிரியர் ஆயுததாரிகளிடமிருந்து மாணவர்களை மீட்கமுயல அவர் கடுமையாக தாக்கப்படுகின்றார். இதனால் அவர் மயக்கமாகி விழுகின்றார். இது ஒருகாட்சி.
வாகனம் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுகின்றான் ஒரு சிறுவன். அழுதபடியே ஏறி அமர்கின்றான் அந்தச் சிறுவன். புழுதியைக் கிளப்பியபடி வாகனம் புறப்படுகின்றது. மின்னல் வேகத்தில் புறப்பட்ட இந்த வாகனம் ஒரு காட்டுப் பகுதியை அடைகிறது.
அங்கு அதிகாலை நேரம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நடுவில் அமர்ந்திருக்கும் சிறுவன் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அமர்ந்தபடியே சாய்கிறான். சட்டென்று விழித்துக் கொண்டு மீண்டும் பயிற்சியில் ஈடுபடுகின்றான். இது இன்னொரு வகைக் காட்சி.
பயிற்சியின்போது சிறுவன் ஒருவன் மீது சுடு தண்ணீரை ஊற்றி அடித்து மிரட்டுகின்றனர். தூங்கியும் அரைத் தூக்கத்திலும் பயிற்சியில் ஈடுபடுகின்றான். கொஞ்சமும் விருப்பமில்லாமல் அழுதபடியே துப்பாக்கி சுடுவதற்கு கற்றுக் கொள்கிறான். கண்ணை மூடியபடியே இலக்கை சரியாக சுட்டுக் காட்டுகிறான். இது இன்னொரு வகை.
ஒரு பெண்ணை தற்கொலைப் போராளியாக தயார்படுத்துகிறார் ஓர் இளைஞர். கொஞ்சமும் விருப்பமில்லாமல் விம்மி வெடித்து அழுதபடியே தற்கொலைப்படை போராளிக்கான உடையை அணிந்து கொள்கிறாள் அந்தப் பெண். இப்படி ஏகப்பட்ட காட்சிகள்.
திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கத்துக்கும் இராணுவத்திற்கும் நன்றி தெரிவிக்கப்படுகின்றது.
்நம்முடைய அன்னை பூமியில் தொலைந்துபோன அமைதியை மீட்டெடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் தொடர்ந்தும் யுத்த பூமியாகவே நீடிக்கிறது. உயிர்ப்பலிகள் தொடர்கதையாக இருக்கின்றன. இந்தத் தொடர் சோகத்துக்கு யாரைக் குற்றம் சொல்வது? நிச்சயமாக சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ அல்ல. அவர்கள் இருவருமே நடுவில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள்? என்ற அறிமுக உரையோடு இந்தப் படம் தொடங்குகின்றது.
படத்துக்கான கதையும் புலிகளிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆர்வத்தின் காரணமாக இணைந்து தற்கொலைப் போராளியாக வளர்ந்த ஒருவன் எப்படி அந்த அமைப்பின் பிடியிலிருந்து விலகி வெளியே வருகிறான். அதற்காக அவனை தூண்டியவை எவை? என்பனவற்றை அடிப்படையாக வைத்தே கதை நகருகின்றது. வன்னி, வவுனியா போன்ற காட்டுப் பகுதிகள்தான் கதைக்களம்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் விடுதலைப் புலிகளின் முகத்தை கோரமாக வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமான யுத்தக் காட்சிகளில் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நிஜமான போர்க் கருவிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து காட்சிகளும் இலங்கை அரசின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டவையாகவேயுள்ளன.
இவ்வாறான நிலையில் புலிப் போராளிகளாலும் அவர்களின் ஆதரவாளர்களினாலும் தமிழகத்தில் நெருக்கடியைச் சந்தித்து வந்த அரசுக்கு தற்போது ்பிரபாகரன்ீ ரூபத்தில் புதிய தலைவலி வந்துள்ளதால் அதனைக் கையாளும் வழிமுறை தெரியாமல் தமிழக பொலிஸாரும் உளவுப் பிரிவான ்றோீ வினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவர்கள் தொடர்பில் இலங்கையிலும் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கும் எதிராக இலங்கையரசின் உதவியுடன் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இறுதியில் தமிழகத்தில் பிரபாகரனுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்குமான ஆதரவை அதிகரிக்க வைக்கும் படமாக அமைந்து விட்டதே உண்மை ! |